search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய கடன்கள்"

    பெருந்தலைவர் காமராஜர் விரும்பியவாறு ஊழலற்ற ஆட்சியை மத்திய அரசு நடத்தி வருவதாக திருப்பூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். #Modiinaugurates #ChennaiMetrostretch #ModiinTiruppur
    திருப்பூர்:

    திருப்பூர் பெருமாநல்லூரில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 

    பின்னர், கோவை, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 8 பாராளுமன்ற தொகுதிகளின் பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில்  பிரதமர் மோடி பேசியதாவது:-

    திருப்பூர் குமரன் உள்ளிட்டோரின் துணிச்சலை பறைசாற்றும் இந்த மண்ணுக்கு தலை வணங்குகிறேன். தொழில் முனைவோர், அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கின்ற மக்களை கொண்டிருக்கிறது திருப்பூர். திருப்பூர் சின்னமலையின் துணிச்சல் உத்வேகம் அளிக்கிறது. ‘மீண்டும் நமோ’ என்ற முழக்கத்தை தாங்கிவரும் டி-ஷர்ட் இதே திருப்பூரில் இருந்துதான் தயாராகி நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது.

    இங்கு பல்வேறு முன்னேற்ற திட்டங்களுக்கு நான் இன்று அடிக்கல் நாட்டி வந்திருக்கிறேன். இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை சுலபமாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    தொழிலாளர்கள் நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மாதம் ரூ.3000 பென்சனாக வழங்கப்படும். 2 பாதுகாப்பு பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் ஒன்று தமிழகத்தில் அமையவிருக்கின்றன.

    பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது. பாதுகாப்புத்துறை முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் எந்த பணிகளையும் செய்யவில்லை. துல்லியத்தாக்குதலையும் எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி பேசினர்.

    இடைத்தரகர்களை வைத்து காங்கிரஸ் ஆட்சி ஊழல் செய்து வந்தது. ராணுவத்தை இழிவுபடுத்துவதற்காக, சிறுமைப்படுத்துவதற்காக மிக மோசமான வார்த்தைகளை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துகின்றனர்.

    பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து முந்தைய காங்கிரஸ் அரசு எந்த அக்கறையும் செலுத்தவில்லை.

    சாகார் மாலா திட்டத்தின் மூலம் கடலோர பகுதிகளில் இந்திய பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அனைவருக்கும் வீடு திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1.3 கோடி மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். நடுத்தரவர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒவ்வொரு இந்தியனுக்குமான அரசாங்கம். பாஜக அரசின் நலப்பணிகள் சிலரது மகிழ்ச்சியை சீர்குலைத்துள்ளது. மீனவ மக்களின் நல்வாழ்வுக்கான தனித்துறை உருவாக்கப்படும் என நாங்கள் அறிவித்துள்ளோம்.

    கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கான நேரடி பலன் சென்று சேரவில்லை.

    தற்போது நாங்கள் அறிவித்துள்ள விவசாயிகளுக்கான 6 ஆயிரம் ரூபாய் வருடாந்திர உதவித்தொகையின் மூலம் வரும் 10 ஆண்டுகளுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குளில் நேரடியாக சென்று சேரும். 

    கடல் முதல் வானம் வரை பல்வேறு ஊழல்களை செய்துள்ளது காங்கிரஸ். இன்று ஊழலோடு தொடர்புடையதாக கைது செய்யப்படும் ஒவ்வொருவரும் யாரோ ஒரு தலைவரோடு தொடர்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.

    ஐஸ்கிரீம், சிம்கார்டு ஆகியவற்றுக்கு ‘பேமிலி பேக்கேஜ்’ முறை இருப்பதைப்போல் இப்போது சில தலைவர்கள் ‘பேமிலி பேக்கேஜ்’ முறையில் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் ஜாமின் பெறுவதற்காக கோர்ட் படிகளை ஏறிக்கொண்டிருக்கின்றனர்.

    மத்தியில் தற்போது இருக்கும் பாஜக ஆட்சியை போன்று ஊழலற்ற அரசு அமைய வேண்டும் என காமராஜர் விரும்பினார். அந்த வகையில் ஊழல்களுக்கும், தவறான செயல்களுக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பூட்டுப் போட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #Modiinaugurates #ChennaiMetrostretch #ModiinTiruppur 
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #DMK #MKStalin #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்விநேரம் முடிந்ததும் கஜா புயல் பாதிப்பு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகள் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். அதன்விவரம் வருமாறு:-

    துரை சந்திரசேகரன் (தி.மு.க.):-

    கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களும், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட வேறு மாவட்டங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. தமிழகத்துக்கே உணவு அளிக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டது. அனைத்து பயிர்களும் சேதம் அடைந்தன.

    தென்னை, வாழை, கரும்பு அடியோடு நாசமாயின. ஏராளமான உயிரிழப்பும் ஏற்பட்டது. ஆனால் பிரதமர் இதைநேரில் வந்து பார்க்கவில்லை. இறந்தவர்களுக்கு அனுதாபமும் தெரிவிக்கவில்லை.

    இதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை 3 நாட்கள் நேரில் சென்று பார்த்தார். 300 லாரிகளில் பொருட்களும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். தமிழக அரசு புயல் நிவாரண உதவியை அறிவித்துள்ளது. மத்திய அரசிடம் கேட்கப்பட்ட நிதியில் மிகக்குறைந்த அளவே கொடுக்க அவர்கள் முன் வந்திருக்கிறார்கள்.

    இன்றைய நிலையில் அங்குள்ள விவசாயிகள் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டார்கள். பெரும்பாலான தென்னை மரங்கள் விழுந்துவிட்டதால் அதைநம்பி இருந்த விவசாயிகள் ஒரேநாளில் ஏழையாகி விட்டார்கள்.

    ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு என்று அரசு அறிவித்துள்ளது. அவர்களுக்கு 8 வழிச் சாலைக்கு அறிவித்ததுபோல் தென்னை ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க அரசு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் முதல்-அமைச்சர் நேரடியாக பார்வையிட வேண்டும். மத்திய அரசிடம் கூடுதல் நிதியை வற்புறுத்தி பெற வேண்டும். விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் பெற்றுள்ள வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதே கோரிக்கையை நானும் வலியுறுத்துகிறேன். விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி கூட்டுறவு வங்கிகளிலும் வாங்கிய கடன்களை இந்த அரசு தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும்.

    அதுமட்டுமல்ல, மாணவர்கள் வங்கிகளில் வாங்கிய கல்விக் கடன்கள், பெண்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய வங்கிக்கடன்கள், மீனவர்கள் படகுகளுக்காக வாங்கிய வங்கிக்கடன்களையும் இந்த அரசு முழுமையாக ரத்து செய்ய முன்வர வேண்டும். முதல்-அமைச்சர் ரத்து செய்வார் என எதிர் பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி விரிவாக பேசினார்கள்.

    கே.ஆர்.ராமசாமி பேசும் போது, ‘‘சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைக்க ஒரு தென்னை மரத்துக்கு ரூ.40 ஆயிரம் தருவதாக கூறினார்கள். ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாய்ந்த தென்னை மரத்துக்கு ரூ.1400 தருவதாக கேள்விப்படுகிறேன். ஏன் இந்த பாகுபாடு. இதற்கு ஒரு நீதி அதற்கு ஒரு நீதியா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அரசு விளக்க வேண்டும்’’ என்றார். #GajaCyclone #DMK #MKStalin #TNAssembly
    என் மகன் மீது சத்தியமாக விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் நான் பதவியை விட்டு போக மாட்டேன் என்று குமாரசாமி உருக்கமாக கூறியுள்ளார். #Kumaraswamy #AgriculturalLoans
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் விவசாயத்துறை சார்பில் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் விழா பாகல்கோட்டையில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கி பேசியதாவது:-

    விவசாயிகளை ஏமாற்றுவதாக பா.ஜனதா சொல்கிறது. ஆனால் விவசாய கடனை தள்ளுபடி செய்ய திடமான முடிவை எடுத்துள்ளோம். விவசாயிகளை நாங்கள் ஏமாற்ற மாட்டோம். என்னை நம்புங்கள். எனது மகன் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், விவசாய கடனை தள்ளுபடி செய்வேன்.



    எங்களுக்கு பலத்தை கொடுங்கள். கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் பயப்பட வேண்டாம். விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் நான் போக மாட்டேன். கடன் தள்ளுபடிக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

    விவசாய கடன் தள்ளுபடியால் 44 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். கடன் தள்ளுபடிக்கு நிதி பற்றாக்குறை இல்லை. தேசிய வங்கி விவசாய கடனையும் தள்ளுபடி செய்துள்ளேன். தேசிய வங்கிகளில் கடனை 4 தவணைகளில் திரும்ப செலுத்துவோம். வருகிற பட்ஜெட்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறும்.

    நான் வட கர்நாடகத்திற்கு எதிரி அல்ல. வருகிற பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்வேன். விவசாய திட்டங்கள் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு குமாரசாமி பேசினார். #Kumaraswamy #AgriculturalLoans
    காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற 3 மாநிலத்திலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை ராகுல்காந்தி பாராட்டியுள்ளார். #RahulGandhi #Congress
    ஜெய்ப்பூர்:

    5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

    15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த மத்திய பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் அரசு விவசாய கடன்களை ரத்து செய்தன.

    மத்தியபிரதேசத்தில் விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வரையிலான கடனையும், சத்தீஸ்கரில் ரூ.6,100 கோடி வரையிலான விவசாய கடனையும் ரத்து செய்து அம்மாநில புதிய முதல்-மந்திரிகள் கமல்நாத், பூபேஷ் பாதேல் ஆகியோர் பதவி ஏற்றவுடன் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் ராஜஸ்தானிலும் விவசாய கடனை தள்ளுபடி செய்து காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

    ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

    அதன்படி பதவியேற்ற 2 தினத்தில் ரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து அம்மாநில புதிய முதல்-மந்திரியான அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

    விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் ரத்தாகி உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும்.


    காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற 3 மாநிலத்திலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் மாநிலங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது சிறப்பானது. நாங்கள் 10 நாட்கள் கேட்டோம். ஆனால் 2 நாட்களிலேயே செய்து முடித்து விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரசுக்கு போட்டியாக அசாமில் ரூ.600 கோடி விவசாய கடனும், குஜராத்தில் ரூ.625 கோடி மின் கட்டணமும் தள்ளுபடி செய்து அம்மாநில பா.ஜனதா அரசுகள் உத்தரவிட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi #Congress
    ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் உள்ள விவசாய கடன்கள் அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம்’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Farmsloans #RahulGandhi #PMModi
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் பிரசாரத்தின்போது இந்த மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.

    அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மத்தியப்பிரதேசம் மாநில முதல் மந்திரியாக நேற்று பதவியேற்ற அசோக் கெலாட் 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகளின் வங்கிக்கடன் ரத்து செய்யப்படுவதற்கான முதல் கோப்பில் கையொப்பமிட்டார்.

    அவரை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில புதிய முதல் மந்திரியாக பதவியேற்ற  பூபேஷ் பாகெல் 6100 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயிகளின் குறுகியகால கடன்கள் இன்னும் 10 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பின் மூலம் அம்மாநிலத்தில் உள்ள கிராம வளர்ச்சி வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்துக்காக கடன் வாங்கிய சுமார் 16.65 லட்சம் மக்கள் பயனடைவார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் உள்ள விவசாய கடன்கள் அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    டெல்லியில் இன்று பாராளுமன்ற வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, அனில் அம்பானி உள்பட நாட்டில் உள்ள 15 தொழிலதிபர்கள் தொடர்பான கடன்பாக்கி பற்றி பாராமுகமாக இருக்கும் மத்திய அரசு, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை கடந்த நான்காண்டுகளில் நிறைவேற்ற தவறி விட்டதாக குற்றம்சாட்டினார்.

    5 மாநில சட்டசபை தேர்தல்களின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால், ஆறே மணி நேரத்தில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம்.

    இதேபோல், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் உள்ள விவசாய கடன்கள் அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் என ராகுல் காந்தி தெரிவித்தார்.  #Farmsloans #RahulGandhi #PMModi

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். #MPFarmersloanwaival #Rahul
    இந்தூர்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது மன்ட்சவுர் மாவட்டத்தில் வெடித்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவத்தை முதலாண்டு துக்க தினமாக இன்று அம்மாநில விவசாயிகள் அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி, மன்ட்சவுர் மாவட்டம், பிப்லியா மன்டி பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.



    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு காரணமான போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த மேடையில் ஜோதிராதித்யா சிந்தியா, மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் போன்றவர்கள் அமர்ந்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் நடைபெறும் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். #MPFarmersloanwaival #Rahul

    ×